வேட்டி அணிந்ததால் முதியவருக்கு அனுமதி மறுத்த வணிக வளாகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பெங்களூருவில் வணிக வளாகத்தில் வேஷ்டி அணிந்துவந்த முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஜிடி மாலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

சம்பந்தப்பட்ட முதியவரை, அவரது மகன் ஜிடி மாலில் உள்ள திரையரங்குக்கு படம் பார்க்க அழைத்துவந்துள்ளார். அதற்காக முன்னரே டிக்கெட் புக் செய்துள்ளனர். அதன்படி, நேற்று படம் பார்க்க வரும்போது முதியவர் வெள்ளை வேஷ்டி, தலையில் முண்டு கட்டி வந்துள்ளார்.

ஆனால், வேஷ்டி அணிந்து மாலுக்குள் நுழைய முதியவரை அங்கிருந்து பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவரது மகன் பாதுகாவலர்களுடன் பேச முயல, வேஷ்டியை மாற்றிவிட்டு வேறு உடையில் வந்தால் மட்டுமே மாலுக்குள் அனுமதி என உறுதியாக கூறி அவர்களை வெளியேற்றியுள்ளனர்.

“நீண்ட தூரத்தில் பயணித்து பெங்களூரு வந்திருப்பதால் உடனே ஆடையை மாற்ற முடியாது” என்று அந்த முதியவரும் அவரது மகனும் பாதுகாவலரிடம், மால் நிர்வாக அதிகாரியிடமும் விளக்குகின்றனர். ஆனால், அதனை அவர்கள் ஏற்க மறுத்து மாலை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துகின்றனர். வேறு வழியில்லாமல், அவர்களும் மாலை விட்டு வெளியேறினர்.

கண் பார்வை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க வில்லை | Thedipaar News

Related Posts