இலங்கையர் உட்பட ஓமன் கடலில் இருந்து 9 பேரை மீட்ட இந்திய கடற்படை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு அருகே கப்பல் கவிழ்ந்தது. திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் Duqm துறைமுகத்துக்கு அருகே எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது. இதில் இலங்கையை சேர்ந்த 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பணியில் இருந்தனர்.

இதையடுத்து மாயமான பணியாளர்களில் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனை ஓமன் கடல் பாதுகாப்பு மையம் தெரிவித்தது. இந்த சூழலில் இந்த பணியில் இந்திய கடற்படையின் போர்க் கப்பலான ஐஎன்எஸ் டெக் மற்றும் கடல்சார் கண்காணிப்பு விமானமான பி-8ஐ இணைந்தது.

 இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று கவிழ்ந்த கப்பல் அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து துரிதமாக மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஓமன் கடல் பாதுகாப்பு மையத்துடன் ஒருங்கிணைந்து இந்திய கடற்படை மேற்கொண்டது. இந்த சூழலில் கவிழ்ந்த கப்பலில் ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Related Posts