ஜப்பானில் சிரிப்பதற்கு ஒரு சட்டம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில் உள்ளூர்வாசிகளின் உடல், மன நலனைக் காக்கும் பொருட்டு ஒருநாளுக்கு ஒருமுறையாவது அவர்கள் சிரித்திட வகைசெய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அம்மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள் சிரிப்பின் மூலம் ஆரோக்கியம் மேம்படும் நாள் எனக் கொண்டாடப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 தினசரி சிரிக்கத் தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தாலும் எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தினைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். மேலும், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் ஒருநாளுக்கு ஒருமுறையாவது சிரிப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts