தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் விழுப்புரம் கோட்டத்தில் சீனிவாசன் என்பவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய ஆதார் அட்டை, பள்ளிச் சான்றுகள், வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களில் தன்னுடைய பிறந்த ஆண்டை தவறுதலாக குறிப்பிட்டுள்ளார். அதாவது 1969-க்கு பதிலாக 1964 என்று இருக்கிறது. எனவே இதை மாற்ற பரிசீலனை செய்யுமாறு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனிவாசன் வழக்கு தொடர்ந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரர் முழுக்க முழுக்க பொய்யான தகவல்களை கூறியுள்ளதாக தெரிவித்தார். அதாவது அவர் கொடுத்த தகவல்களின்படி ஒரு வயதில் மனுதாரர் 1-ம் வகுப்பு படித்துள்ளார். அதன் பிறகு கடந்த 1982-ல் அவருக்கு 13 வயது இருக்கும்போது 12-ம் வகுப்பை முடித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி மனுதாரருக்கு ரூ. 50 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Font size:
Print
Related Posts