தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுடன் பல படங்களில் காமெடி ரோலில் இணைந்து நடித்தவர் வாசுகி. கோவை சரளாவிற்கு இணையாக வளர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொடர்ந்து படங்கள் நடித்தாலும் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்தார். துடிப்பான நடிகை, ஆர்வமுள்ள அரசியல்வாதி என பல பிம்பங்களை கொண்டவர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் அதிமுகவில் அவர் ஓரங்கட்டப்பட சினிமா வாய்ப்பும் இல்லாமல் தனது சொந்த ஊரான காரைக்குடிக்கே சென்றுவிட்டார். தற்போது அவர் எந்த வேலையில் இல்லாததால் சாப்பாட்டிற்கே கஷ்டப்படுவதா பேட்டி கொடுத்துள்ளார்.
நடிகை வாசுகி கொடுத்த சமீபத்திய பேட்டியில், தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு நடிகர் சங்கம் உதவவில்லை, எந்த நடிகரும் உதவி செய்யவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவில் சில நடிகர்கள், அங்குள்ள நடிகர் சங்கம் எனக்கு உதவிகள் செய்கின்றனர்.
ரேஷன் கடையில் தரும் அரிசியை வைத்து சாப்பிட்டு வருகிறேன். எனக்கு தங்குவதற்கு ஒரு இடமும், வேலையும் கொடுத்தால் போதும் நான் பிழைத்துக் கொள்வேன்.இப்போது நான் ரோடு ரோடாக திரிகிறேன், தயவு செய்து எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். சினிமாவில் கோடியில் சம்பளம் வாங்கும் சில நடிகர்கள் ஒரு பக்கம், மறுபக்கம் சோற்றுக்கே வழி இல்லாத, மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் திணறும் கலைஞர்கள். சினிமாவில் நடிகர்கள் சங்கத்தின் வேலை தான் என்ன? ஒரு துறை வளர பெரிய நடிகர்கள் மட்டுமா உழைத்தார்கள்? சிறிய நடிகர்கள் இல்லையென்றால் பெரிய நடிகர்கள் ஏது? இப்படி எதிர்காலம் கேள்விக்குறி ஆவதால் தான் சினிமா துறையில் ஆர்வம் இருந்தும் சில இளைஞர்கள் ஒதுங்கியே நின்றுவிடுகிறார்கள்.