சமீபகாலமாக இந்தியாவின் தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறியிருக்கிறது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வு. சோசியல் மீடியா முழுக்க இவர்களது திருமணம் பற்றிய டாக் தான். உலகத்தில் உள்ள எல்லா துறைகளிலும் உள்ள எல்லா புகழ் பெற்ற நிபுணர்களும் குழுமியிருந்த ஒரே இடம் அம்பானி வீட்டு திருமணம். உலகத்திலே இப்படி ஒரு கல்யாணத்தை இதுவரை யாரும் செய்யவில்லை, இனியும் செய்வார்களா என்றால் சந்தேகமே! இந்த திருமண நிகழ்ச்சியில் பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, அட்லீ ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதிலும் ரஜினிகாந்த் அம்பானி திருமணத்தில் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிபிடத்தக்கது.
ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பிரபல நடிகை டாப்ஸி கலந்து கொள்ளவில்லை. இதை பற்றி அவர் கூறியதாவது, அம்பானி குடும்பத்தினரை நான் தனிப்பட்ட முறையில் தெரியாது. திருமண நிகழ்ச்சிகள் என்பது குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வுகள். அப்படியான தொடர்பு இருந்தால் தான் நான் திருமணத்திற்கு செல்வேன் என கூறியுள்ளார். இவரது கருத்துக்கு ஆதரவே குவிந்து வருகிறது. காரணம் இவர் மட்டும் தான் உண்மையை பேசுகிறார். பலரும் அம்பானி வீட்டு நிகழ்ச்சிக்கு போவதை பெருமையாக நினைக்கும் நேரத்தில் டாப்ஸி தனித்து நிற்கிறார்.