விசேட தேவையுடையோர் வாக்களிக்க சந்தர்ப்பம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் மற்றும் செவிப்புலன் குறைபாடுடையவர்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

பார்வையற்றோர் பிரெய்ல் முறையில் வாக்குச் சீட்டின் அடையாளங்களை அடையாளம் காணும் விதத்தில் விசேட முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கு சைகை மொழியில் வாக்குச்சீட்டு குறித்து தெளிவுப்படுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் முன்னோடித் திட்டங்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டதுடன் அதன் வெற்றிகரமான பெறுபேறுகளின் அடிப்படையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கும் அதே வசதிகள் வழங்கப்படவுள்ளன.

வலது குறைந்தோர் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கும் விசேட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.  (P)

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் | Thedipaar News

Related Posts