ஏ9 வீதியில் கோர விபத்து

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் இன்று (20) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுஸரும் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்துள்ளது. (P)

படகில் தீப்பரவல் - 40க்கும் மேற்பட்டோர் மரணம் | Thedipaar News

Related Posts