தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் மாதம் அமலாக்க துறையால் பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு அவரை அழைத்துச் செல்லும் பொழுது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு பின்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி குற்றச்சாட்டு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நேரில் ஆஜராக இருந்த நிலையில் அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்த உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் இதனால் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர்.
அமலாக்கத்துறை கையில் சிக்கிக்கொண்ட செந்தில் பாலாஜியினால் அதன் விசாரணை வளையத்திலிருந்து வெளியேற முடியவில்லை என பலரும் கூறி வருகின்றனர். விசாரணைக்கு பயந்து மழுப்பும் வேலையாகவே உடல்நிலை கோளாறு என்ற நாடகத்தை நடத்துவதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.
Font size:
Print
Related Posts