சென்னை உயர் நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் மதுபானங்களை ரேஷன் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு கள் விற்பனை செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மதுபானங்களை ரேஷன் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்றவைகளில் விற்பனை செய்வது தொடர்பாக முடிவு எடுப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் யாரும் தலையிடக்கூடாது என்று வாதிட்டார். அப்போது பேசிய நீதிபதிகள் மீண்டும் ஏன் கள் விற்பனை செய்யக்கூடாது என்றார். அதன்பிறகு கள் விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்யக்கூடாதா.? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கான தீர்வை வருகிற 29ஆம் தேதி தள்ளி வைத்துள்ளனர்.
Font size:
Print
Related Posts