ஒரு கலெக்டரே இப்படி பேசலாமா? குவியும் கண்டனம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் முதன்முதலாக ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணிக்கான ஆணையில் கையெழுத்திட்டார். இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரியான ஸ்மிதா சபர்வால், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் பணிகளில் மாற்றித் திறனாளிகளுக்கு எதற்காக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். விமானப்படை மற்றும் இராணுவத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. இதேபோன்று தான் ஐஏஎஸ் பணியையும் கருத வேண்டும். ஏனெனில் இந்த பணிகளில் மக்களின் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இது ஒரு நீண்டகால பணி என்பதால் உடலானது அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த கருத்துக்கு சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அவர் உடனடியாக தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

Related Posts