ஐந்து லட்சம் முதலீடு செய்தால் அது பதினைந்து லட்சமாக கிடைக்க வேண்டுமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவிலான வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி அஞ்சலக நிலையான முதலீட்டு திட்ட டெபாசிட்களுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் நீங்கள் 5 லட்சம் இந்த திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதன் மூலமாக 5 ஆண்டுகளில் உங்களுக்கு வட்டியாக 2,24,974 ரூபாய் கிடைக்கும். முதலீடு மற்றும் வட்டியை சேர்த்து உங்களுக்கு மொத்தம் 7,24, 974 ரூபாய் கிடைக்கும். அதை அப்படியே அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். இப்போது உங்களுடைய வட்டியுடன் சேர்த்து மொத்தம் 15,24,149 ரூபாய் கிடைக்கும். இவ்வாறு ஐந்து ரூபாய் முதலீட்டில் 15 ஆண்டுகளில் 15 லட்சம் ரூபாய் நீங்கள் பெற முடியும்.

Related Posts