தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழ் புதல்வன் திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ஆதார் எண் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து அந்த நகலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆதார் எண் வரும் வரை இதை சான்றாக காண்பிக்கலாம். இந்த ஆவணங்களுடன் வங்கி அல்லது தபால் கணக்கு புத்தகம், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கிசான் கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம் தாசில்தார் அல்லது கெசட் அதிகாரி அளித்துள்ள அடையாளச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
சுமந்திரனிடம் தமிழ்த் தேசிய உணர்வு இல்லை - விக்னேஸ்வரன் | Thedipaar News