இலங்கை கடற்படையால் 30 நாள்களில் 87 மீனவர்கள் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் தமிழ்நாடு மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடலுக்குச் சென்றனர். 

கடந்த ஜூன் 25-ம் தேதி நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரைப் படகுடன் கைதுசெய்து கொண்டு சென்றது இலங்கை கடற்படை. அடுத்த ஒரு வாரத்துக்குள் மேலும் 25 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டனர்.

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் 61 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட, முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இது குறித்துக் கடிதம் எழுதினார். 

தொடர்ந்து தமிழ்நாடு மீனவப் பிரதிநிதிகளும் மதுரைக்கு வந்திருந்த மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கைவைத்தனர்.

இந்த நிலையில், ஜூலை 23-ம் தேதி மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகக் கடந்த 30 நாள்களில் சுமார் 87 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டிருப்பதால், கொதிப்பில் இருக்கிறார்கள் மீனவர்கள்.

அதிக விலையில் பாண் விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை | Thedipaar News

Related Posts