இலங்கை திருகோண மலையைச் சேர்ந்த அப்துல் ரியாஸ் கான் (40). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடிக்கு வந்தார். பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் பதிவு செய்யாமல் மதுரை மற்றும் புதுச்சேரியில் தங்கி இருந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரையில் சுற்றித்திரிந்த அப்துல் ரியாஸ் கானை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரை தெற்கு வாசல் போலீசார் சந்தேகத்தின் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்தவித ஆவணங்களிலும் இன்றி அப்துல் ரியாஸ்கான் மதுரையில் தங்கி இருந்த தெரிய வந்தது.
தொடர்ந்து பாஸ்போர்ட் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக கீயூ பிரிவு போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜாமில் வந்த அப்துல் ரியாஸ்கான் 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை, ராமநாதபுரம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி இருந்த வீட்டில் நகை, பணத்தை கொள்ளை அடித்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருட்டு வழக்கில் ராமநாதபுரம் போலீசாரல் கைது செய்யப்பட்ட அப்துல் ரியாஸ் கான் மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்து ஜனவரி மாதம் சென்னை புழல் சிறையில் இருந்து அப்துல் ரியாஸ் கான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் காலையில் சிறப்பு முகாமில் தங்கி உள்ளவர்கள் இருப்பு பதிவு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது அப்துல் ரியாஸ்கான் முகாமில் இல்லாதது தெரிய வந்தது. அவருடைய அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் ஜன்னல் கம்பி அறுத்து உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அங்கிருந்த சிறை காவலர்கள் மற்றும் போலீசார் அதிர்ச்சடைந்தனர். அப்போதுதான் அப்துல் ரஹ்மான் அங்கிருந்து ஜன்னல் கம்பியை அறுத்து தப்பி சென்றது தெரிய வந்தது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக அப்துல் ரியாஸ் கான் அறையில் இருந்து வெளியே வராததும் அவருடைய அறை பூட்டிய இருந்ததும் தெரிய வந்துள்ளது. அவர் முகாமில் இருந்து தப்பி மூன்று நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் அவருடைய உறவினர்கள் ராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரி அகதிகள் முகாமில் தங்கி இருப்பதால் ஒருவேளை ராமேஸ்வரம் அல்லது புதுச்சேரி வழியாக இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என்று கோணத்தில் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
சீனாவில் கடும் மழை | Thedipaar News