மூன்றாக உடைந்தது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூன்றாக பிளவடைந்துள்ளது. இந்த கட்சி உறுப்பினர்கள் மூன்றாக பிளவுப்பட்டு, மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கி வருவதை காண முடிகின்றது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான குழு, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. 

 அத்துடன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் தலைமையிலான குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. மேலும், தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குகின்றார்.

 இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான புதிய கூட்டணி ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தகவலை எதிர்வரும் 31ம் திகதி வெளியிடவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். (P)

Related Posts