BREAKING பதவி விலகினார் விஜயதாஸ ராஜபக்ஸ

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜயதாஸ ராஜபக்ஸ, அனைத்து அமைச்சு பொறுப்புக்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

 இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறினார். நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் ஆகிய அமைச்சு பொறுப்புக்கள் விஜயதாஸ ராஜபக்ஸ வசம் காணப்பட்டன. 

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜயதாஸ ராஜபக்ஸ உத்தியோகப்பூர்வமாக அறிவித்த நிலையில், அவர் இன்று தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.

Related Posts