ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க கிடையாது என இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவரும்,ராஜபக்ஸ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதில்லை என தமது கட்சி இன்று தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
“நாட்டிற்கு இன்று மகிழ்ச்சியான செய்தி. பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க இல்லை என தற்போது தீர்மானிக்கப்பட்டது. ராஜபக்ஸ குடும்பம் மாத்திரம் இல்லை, கட்சியின் அரசியல் குழுவும் இந்த தீர்மானத்தை இன்று எடுத்தது. எந்த விதத்திலும் ரணில் விக்ரமசிங்க எங்கள் வேட்பாளர் கிடையாது என தீர்மானிக்கப்பட்டது. ரணில் எமக்கானவர் அல்ல. மிக மகிழ்ச்சியான செய்தி. எமது வேட்பாளரின் பெயர் இன்று முன்மொழியப்பட்டது. தீர்மானம் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். (P)