நல்லாட்சி அரசாங்கத்தின் ஐவர், ஜனாதிபதித் தேர்தல் களத்தில்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நல்லாட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐந்து தலைவர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

 கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுர குமார திஸாநாயக்க, சரத் பொன்சேகா மற்றும் விஜயதாஸ ராஜபக்ஸ ஆகிய ஐவரும் நால்லாட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முக்கியஸ்தர்கள் என அவர் கூறினார். அநுர குமார திஸாநாயக்க நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு குழுவின் தலைவராக செயற்பட்டார் என அவர் குறிப்பிடுகிறார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டதாக கூறிய அவர், சஜித் பிரேமதாஸ, விஜயதாஸ ராஜபக்ஸ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் அமைச்சர்களாக செயற்பட்டதாக குறிப்பிட்டார்.

 இந்த ஐவரும் இணைந்து பிரதிநிதித்துவப்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தை 69 லட்சம் மக்கள் இணைந்து தோற்கடித்ததாக அவர் தெரிவிக்கின்றார். 

 இந்த ஐவரும் பிளவுப்பட்டு, ஐந்து அணிகளாக போட்டியிட்டாலும், ஐவரின் எண்ணங்களும் ஒன்றே என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். (P)

Related Posts