எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையில் (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலுக்கு மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுனுகம, காஞ்சன விஜேசேகர, எஸ். பீ திஸாநாயக்க, லொஹான் ரத்வத்த, கீதா குமாரசிங்க, அலி சப்ரி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தின் பின்னர், இந்த கலந்துரையாடலுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்துள்ளதுடன், இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் உட்பட ஏறக்குறைய 70 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அலுவலகத்தில் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. (P)