கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்தில் 19 பேர் பலியாகியுள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் 500 குடும்பங்கள் வரை சிக்கியுள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.200000, காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50000 நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Font size:
Print
Related Posts