பிரான்ஸில் இன்டர்நெட் கேபிள்கள் சேதம்: இணைய சேவை பாதிப்பு?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஃபைபர்-ஆப்டிக் இன்டர்நெட் கேபிள்கள் சேதம் காரணமாக இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை போலீஸார் உறுதி செய்துள்ளனர். 

இருந்தும் இதனால் பாரிஸ் நகரம் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு விஷமிகளின் தீவைப்பு உள்ளிட்ட சதிவேலைகள் காரணமாக அதிவேக ரயில் சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாதிக்கப்பட்டன. 

பாரிஸ் நகரில் ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு சில மணி நேரத்துக்கு முன் ஏற்பட்ட இந்த பாதிப்பால் லட்சக்கணக்கான பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தச் சூழலில் அடுத்த மூன்றே நாட்களில் இன்டர்நெட் கேபிள்கள் சேதம் செய்யப்பட்டுள்ளது.

Related Posts