மலையகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் விவசாய சங்கமும் ஒன்றினைந்துள்ளதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் அதிகமான விவசாயிகளை கொண்ட மூத்த தொழிற்சங்கமான இலங்கை விவசாய சங்கமானது எங்களுடன் ஒன்றாக இணைந்து இன்று முதல் புதிய பயணத்தினை ஆரம்பித்துள்ளோம்.
இலங்கை விவசாய சங்கத்தின் 10 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் என்னுடன் இணைந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி இனி வரும் காலங்களில் பாரிய புரட்சியினை ஏற்படுத்துவோம் இலங்கை விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் மாதவன் சுரேஷ் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்துடன் அவர்களுடைய ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளனர் இவ்வாறு இணைந்த நாங்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க ரீதியிலும் அரசியல் ரீதியாகவும் பலதரப்பட்ட சேவைகளை மலையக மக்களுக்கு வழங்க தயாராக உள்ளோம் இதன் முதல் கட்டமாக எதிர்காலத்தில் எவ்வாறு தலைமைத்துவம் வழங்குவது ? எவ்வாறு சமூகத்துக்கு சேவை செய்வது மற்றும் இவ்வாறு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் ஆரம்பத்தில் பேசி தீர்மானித்துள்ளோம் ஆகவே இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திற்கு வயது 70 இலங்கை விவசாய சங்கத்திற்கு வயது 60 எனவே இவ்வாறு பழமை வாய்ந்த இரண்டு சங்கங்களும் ஒன்றாக இணைந்து மலையக இளைஞர் யுவதிகளுக்கும் பல முக்கிய வேலை திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம் இந்த மாற்றம் பல தலைமைத்துவங்களை உருவாக்குவோம் இதில் எந்த ஐயமும் இல்லை சிலர் பாராளுமன்றத்திலும் கூட கடமைக்கு பேசுவார்கள் ஆனால் நான் மலையக தாயின் மகன் என்ற வகையில் எனது இதயத்தில் இருந்து பேசுவேன் ஆகவே பொறுத்திருந்து பாருங்கள் எங்களுடைய நடவடிக்கைகளை என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். (P)