ரொறன்ரோவில் வாகன ஓட்டிகளை அதிர வைக்கும் அறிவிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் முதல் ரொறன்ரோவில் வாகன தரிப்பு விதி மீறல் அபராதங்கள் அதிகரிக்கப்பட உள்ளது.

சட்டவிரோதமாக வாகனங்களை தரித்து வைத்திருத்தல், வாகனங்களை தேவை இன்றி நிறுத்தி வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுக்கான அபராத தொகை அதிகரிக்கப்படும் என ரொறன்ரோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடத்தல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்ததல் போன்றவற்றை ஊக்குவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அதிக வாகன நெரிசல் காணப்படும் பகுதிகளில் வாகனங்களை தரித்து நிறுத்த வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

வாகன தரிப்பு கட்டணம் செலுத்தாது வாகனத்தை நிறுத்துவோருக்கான அபராத தொகை 30 டாலர்களில் இருந்து 50 டாலர்களாக உயர்த்தப்பட உள்ளது. வாகன தரப்பிற்கு தடை செய்யப்பட்ட சைக்கிள் பாதைகளில் வாகனங்களை தடுத்து நிறுத்துவதற்கான அபராத தொகை 60 டாலர்களில் இருந்து 200 டாலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

இதேவேளை வாகன தரிப்பு குற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் குறுஞ்செய்திகள் அனுப்பப்படாது எனவும் இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது. குறுஞ்செய்திகளை அனுப்பி சிலர் மோசடிகளில் ஈடுபடுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts