பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்

ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நெலும் மாவத்தை தலைமையக வட்டாரங்கள் இதனைத் தெரிவித்தன.

கட்சித் தலைமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இந்தத் தீர்மானத்தை தம்மிக்க பெரேராவிடம் தெரிவித்த பின்னர், அவர் அதற்கு இணங்கியதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அதன் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ‘அனித்தா’ நாளிதழ் கேட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளதால் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (P)

பஸ் - லொறி விபத்து | Thedipaar News

Related Posts