யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது அன்புக்குரியவர்களைக் கண்டறியும் நோக்கில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தாய் ஒருவர், பயங்கரவாதப் பொலிஸாரினால் அழைக்கப்பட்டு நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஜூலை 30ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், அன்றைய தினம் மாலை மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி, கொழும்பில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவித்து பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) மட்டக்களப்பு பிரிவு அதிகாரிகள், தம்மிடம் காட்டப்பட்ட சிங்கள கடிதக் கோப்புகளில் தான் பயங்கரவாதி என அடையாளப்படுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். (P)
தோட்ட மக்களுக்காக சகல வசதிகளுடன் கூடிய கிராமம் | Thedipaar News