நீதிமன்றத்தில் அசிங்கப்பட்ட விஷால்! திட்டித்தீர்த்த நீதிபதி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் விஷால் கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தமிழில் முன்னணி ஹீரோ என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் உண்மையில் முன்னணி ஹீரோதானா? என்றால் சந்தேகமே! ஏனெனில் சில ஆண்டுகளாக இவர் நடிக்கும் படங்கள் எதுவும் ஹிட் கொடுப்பதில்லை. சினிமா வெளிச்சத்திலே இருக்க வேண்டும் என்பதற்காக நடிப்பது போலவே தெரிகிறது. மற்றபடி இவரது படங்கள் எல்லாம் மிகவும் சுமாராகவே ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் இவர் வாங்கிய 21.29 கோடி ரூபாய் கடனை லைகா நிறுவனம் செலுத்திய நிலையில், அதற்காக விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் படங்களின் உரிமையை லைகாவுக்கு தர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.அந்த ஒப்பந்தத்தை விஷால் மீறிவிட்டார் என அவர் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விஷால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

 அப்போது அவர் தனக்கு லைகா ஒப்பந்தம் பற்றி தெரியாது, என்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள் என கூறினார். அதற்கு நீதிபதி புத்திசாலிதனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீங்களா, போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்?? இது சினிமா ஷூட்டிங் இல்லை என கூறி இருக்கிறார். அதுமட்டும் அல்லது நீதிமன்றத்தில் பேசும்போது விஷால் நீதிபதியை பாஸ் என அழைத்து இருக்கிறார். அதற்கு கோபமான நீதிபதி விஷாலை எச்சரித்து இருக்கிறார்.இதுபோல பாஸ் என அழைக்க கூடாது. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க என விஷாலை நீதிபதி எச்சரித்து இருக்கிறார். படித்து நாட்டில் பெரிய பொறுப்பில் இருப்பவரை பார்த்து இப்படியா நண்பரை அழைப்பது போல பாஸ் என்பது? என நெட்டின்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

Related Posts