இயற்கை கொண்டாட எந்த அளவிற்கு அழகாக உள்ளதோ அதே அளவிற்கு கொஞ்சம் அசைந்தால் என்ன ஆகும் என்பது இப்போது வயநாட்டில் நடந்த சம்பவம் மூலம் நன்றாக தெரிகிறது. கேரளாவில் வெள்ளம் வருவது இது ஒன்றும் புதிதல்ல. முன்னதாக 2017,2021 என பல குறிப்பிட்ட கால இடைவெளியில் வெள்ளம் கேரளாவை வாட்டி வதைத்து கொண்டு தான் உள்ளது. ஒன்றிய அரசு தலைமையில் அங்கு நடந்த ஆய்வில், சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தொழில்கள், ஒற்றை பயிர் சாகுபடி என மண்ணின் வளத்தை மட்டுப்படுத்தும் செயல்களே அங்கு அதிகம் என ஆய்வறிக்கை வெளியானது. வெளியானது மட்டும் தான் மற்றபடி எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
இதற்கு முன்பும் இயற்கையின் கோர முகத்தை பார்த்துள்ளோம், இந்த முறை படு மோசமாக உள்ளது. வயநாட்டில் இருந்து அடுத்தடுத்து வரும் செய்திகள் அனைவரையும் பதற வைக்கிறது.தொழிலதிபர்கள், பிரபலங்கள், சாதாரண மக்கள் என அனைவருமே வயநாடு மக்கள் இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர தங்களால் முடிந்த பண உதவி செய்து வருகிறார்கள்.தொடர்ந்து பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவரும் நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து ரூ. 20 லட்சம் வயநாடு மக்களுக்காக பண உதவி செய்துள்ளனர்.