வயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்கள், இருப்பிடம், உடமைகள் என அனைத்தையும் இழந்துள்ள முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 25 தமிழர்கள் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கியிருந்த 130 தமிழர்கள் மீட்கப்பட்டு தற்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு வயநாட்டில் குடியேறி வசித்து வரும் 21 தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வேலை நிமித்தமாக வயநாடு சென்ற 3 தமிழர்கள் என 24 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பணிக்காக வயநாடு சென்ற 3 பேர் மற்றும் வயநாட்டிலேயே குடியேறி வசித்து வரும் 22 பேர் என 25 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Posts