தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் : வெளியான முக்கிய அறிவிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான நாள் இன்றுடன் (05) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்காதவர்கள் நள்ளிரவுக்கு முன்னதாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மொத்தம் 14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அவர்களில், எட்டு பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் ஐந்து பேர் மற்ற அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சை வேட்பாளர்களாவர்.

இதனடிப்படையில், 15 ஆம் திகதி காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  தேர்தல் ஆணையத்தின் இணையதளமான https://www.elections.gov.lk இற்குச் சென்று விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுந்து வாக்காளர் நிலையை உறுதிப்படுத்த தேசிய அடையாள எண் மற்றும் பதிவு மாவட்டத்தை உள்ளிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts
©   Thedipaar

எகிறியது எண்ணை விலை

©   Thedipaar

கனடாவில் அவசரநிலை