பங்களாதேஷில் இராணுவ ஆட்சி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பங்களாதேசில் ஆட்சியை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் இராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக இராணுவ தளபதி வாக்கர் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இங்கு இராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அனைத்து பாடசாலை, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. சமூக வலைதளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அந்நாட்டில் இடைக்கால அரசை இராணுவம் அமைப்பதாக இராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவோம். கடினமான சூழலில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார். (P)


Related Posts