2040 கடலில் மூழ்க போகும் நகரங்கள்! அதிர்ச்சியை கிளப்பும் ஆய்வு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பெங்களூரில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் தற்போது கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், கடலின் நீர்மட்டம் உயர்வதால் சென்னை, மங்களூரு, பரதீப், யானம், உடுப்பி, பூரி, பனாஜி, ஹல்டியா, கோழிக்கோடு, விசாகப்பட்டினம், கொச்சி, மும்பை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 15 நவரங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் சென்னை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த ஆய்வில் 2040 ஆம் ஆண்டுகள் சென்னையின் நிலப்பரப்பில் 7 சதவீதம் கடல் நீர்மட்டதினால் மூழ்கிவிடும் என்று தெரியவந்துள்ளது.

Related Posts