Font size:
Print
நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சை தான் பொறுப்பேற்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வரும் விஜயதாச ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ததால் அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சு பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அரசியலமைப்பின் 44 (3) ஆவது சரத்தின் பிரகாரம், பிரதமருடனான ஆலோசனைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உறுதிப்படுத்தினார். (P)
Related Posts