பாதாள சாக்கடையில் விழுந்த ஊழியருக்கு நேர்ந்த கதி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, அருந்ததிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். கோபிநாத், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆவடி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைகளை தூய்மைப்படுத்துதல், அடைப்புகளை நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட, ஜெ.பி.எஸ்டேட்- சரஸ்வதி நகர் பகுதியில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதையடுத்து, அதை ஜெட்ராடிங் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் கடந்த 2 நாட்களாக கோபிநாத் உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். 

கோபிநாத், பாதாளச் சாக்கடையினுள் இறங்கி, ஜெட்ராடிங் இயந்திரத்தின் குழாயை இணைக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் மேலே ஏறிய நிலையில் திடீரென நிலை தடுமாறி மீண்டும் பாதாளச் சாக்கடையின் உள்ளே விழுந்தார். அப்போது கழிவு நீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கோபிநாத் பாதாள சாக்கடைக்குள் இறங்கி ஜெட்ராடிங் இயந்திரக் குழாயை இணைத்துக் கொண்டிருந்தபோது, விஷவாயுவை சுவாசித்ததால் மயங்கி உள்ளேயே விழுந்து இறந்துவிட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Posts