Font size: 15px12px
Print
ரொறன்ரோவின் சென்ட் கிளையர் ரயில் நிலையத்தில் குரோத உணர்வின் அடிப்படையில் ரயில் பயணிகள்மீது இரண்டு சிறுமியர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கானவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலையும் மேற்கொண்ட இருவரும் பதின்ம வயதுடைய சிறுமிகள் என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 16 வயது மதிக்கத்தக்க கருப்பு மற்றும் பிரவுன் தோலுடைய இரண்டு சிறுமிகள் இவ்வாறு சிலரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் தங்களது உடலில் பச்சை குத்தி இருந்தனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
Related Posts