Font size: 15px12px
Print
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்தப் பாதுகாப்பு திட்டங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராஜகிரியவில் உள்ள தேர்தல் அலுவலகத்தை அண்மித்த வீதிகளில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வருகைதரும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. (P)
Related Posts