உண்மையை உடைத்து கூறிய பிரபாஸ்! பொது நிகழ்ச்சியில் ஓபன் டாக்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்னிந்தியத் திரைப்படத்துறை என்பது வெவ்வேறு திரைப்படத்துறைகள் அதாவது தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகள் அடங்கியது. தென்னிந்திய சினிமா, பாராட்டப்பட முக்கிய காரணம் நடிகர்களுக்கிடையே உள்ள ஒற்றுமையே ஆகும். ஆனால், இப்பொழுதும் சில நடிகர்களுக்கிடையே வசூல் ரீதியாக போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது.அவ்வாறு, பிரபல நடிகர் பிரபாஸ் முன்பு நடந்த நேர்காணல் ஒன்றில் தனக்கும் சக நடிகர்களுக்கும் இடையே இருக்கும் போட்டி பற்றி ஒருமுறை பேசியுள்ளார். மேலும், அந்த சூழலை எவ்வாறு கையாண்டார் என்பதை பற்றியும் கூறினார். அந்த பேட்டியில், ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுனுடனான போட்டி பற்றி பிரபாஷிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதில் அளித்த அவர், எல்லா துறைகளிலும் போட்டி என்பது இருக்கும் அது போலவே, சினிமாவிலும் போட்டி இருக்கிறது. ஆனால் முன்பை விட தற்போது அதிகமாகவே இருக்கிறது என கூறியுள்ளார். மேலும், நான் எந்த போட்டியுமின்றி நடிக்க என் திறமையின் மீது மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன் எனவும் கூறியுள்ளார் நடிகர் பிரபாஸ். 

 போட்டி மட்டுமா உள்ளது? நேபோட்டிசம் சேர்ந்து உள்ளது அதாவது வாரிசு நடிகர்கள் காலம்காலமாக பரம்பரை பரம்பரையாக நடிக்க வருவது. அதனாலே உண்மையான திறமைகள் காணாமல் போய்விடுகிறது. உண்மை என்னவென்றால் தமிழ் சினிமா மட்டும் தான் உண்மையான திறமைக்கு மரியாதை கொடுத்து, குறிப்பிட்ட நபரின் பின்னணி பார்க்காது கோபுரத்தில் உட்காரவைக்கிறது. யாருடைய பையன், எந்த குடும்ப பின்னணி என்பதை எல்லாம் தமிழ் சினிமா பார்ப்பதில்லை, இங்கு திறமை இருந்தால் மட்டுமே நிற்க முடியும் என்பதற்கு சிவகார்த்திகேயன், யோகிபாபு, சந்தானம் போன்ற பல உதாரணங்கள் உள்ளனர்.

Related Posts