அஜித்திற்கு போன் போட்ட விஜய்! என்ன பேசிக்கொண்டார்கள்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அஜித்தின் திரை வாழ்க்கையில் மறக்கமுடியாத மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தை இயக்கியவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவருடைய இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் GOAT. இப்படத்திற்காக சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் குறித்து பேசிய வெங்கட் பிரபு பேசியது பின்வருமாறு, கொஞ்ச நாளைக்கு முன்னாடி அஜித் சார் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது அவரை பார்க்க போயிருந்தேன். போவதற்கு முன்னால் விஜய் சார்கிட்ட, அஜித் அண்ணாவைப் பார்க்க போறேன்னு சொன்னேன். அங்கேபோனதும் போன் போட்டுக் குடுடான்னு சொன்னார். அஜித்தை பார்த்தவுடன் விஜய் சார்கிட்ட போன் போட்டு கொடுத்ததும் அவங்க இரண்டு பேரும் அழகா, சாதாரணமா, இயல்பா, சந்தோஷமாக பேசிட்டிருந்தாங்க என கூறினார். அஜித்திற்கும் விஜய்க்கும் ஆகாது, அவர்களுக்குள் சண்டை என்பதெல்லாம் அவர்களது படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும்போது,பேசப்படும் கிசுகிசுக்கள். என்னதான் இருவரும் தொழில் ரீதியாக போட்டியாளர்கள் என்றாலும் கூட, நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் என்பதே நிதர்சனம்.

Related Posts