பிக்பாஸ் எட்டு எப்போது? உறுதியான போட்டியாளர்கள்?

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

விஜய் தொலைக்காட்சியில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட, எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். தொடர்ந்து 7 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாக இப்போது 8வது சீசனை காண தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். 7 சீசன்கள் வரை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் பிக்பாஸில் இருந்து விலகியிருக்கிறார். பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற பெரிய வாக்குவாதம் சமூக வலைதளங்களில் அதிகம் நடக்கிறது. யாரெல்லாம் இதில் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற ஆர்வத்தை தாண்டி யார் இதனை தொகுத்து வழங்க போகிறார் என்ற ஆர்வம் தான் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. தொகுத்து வழங்க உள்ள நபர் கமல் அளவிற்கு பேசி விடுவாரா? கமலுக்கு இருக்கும் புரிதல் இருந்து விட போகிறதா? கமலை தாண்டி ஒரு லெஜெண்ட் இருந்தால் மட்டுமே பிக்பாஸிற்கு சரியாக இருக்கும் என்றவாறு பல வாக்குவாதங்கள் இணையத்தில் உலா வருகிறது. 

 அதன்படி சிம்பு, விஜய் சேதுபதி, சரத்குமார் என பலரின் பெயர்கள் அடிபடுகிறது, ஆனால் யார் தொகுப்பாளர் என்பதை பொறுத்திருந்து காண்போம்.இந்த நிலையில் பிக்பாஸ் 8வது சீசனில் உறுதி செய்யப்பட்டுள்ள 3 போட்டியாளர் என ஒரு தகவல் ரசிகர்களிடம் வலம் வருகிறது. இந்த சீசனில் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் மற்றும் அதே தொடரில் வில்லியாக கலக்கிய பரீனா இருவரும் உறுதியானதாக கூறப்படுகிறது.அதேபோல் டிடிஎப் வாசனின் காதலியும் குக் வித் கோமாளி பிரபலமான சோயா பிக்பாஸ் 8 போட்டியாளர் என்கின்றனர்.

Related Posts