தமிழில் சில படங்களே நடித்தாலும் ஒரு சில நடிகைகளை மக்கள் இன்றும் மறக்காமல் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருக்கும் ஒரு நாயகி தான் வசுந்தரா தாஸ். தமிழில் கமல் நடித்த ஹே ராம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே பெரிய வெற்றியை கொடுக்க அடுத்தடுத்தும் பட வாய்ப்புகள் அதிகம் குவிந்தது. ஆனால் திடீரென அதிகம் இந்தியில் கவனம் செலுத்தியவர் சில ஆண்டுகள் கழித்து அஜித்தின் சிட்டிசன் மூலம் தமிழ் பக்கம் வந்தார். வசுந்தரா, தமிழை தாண்டி இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் சில படங்களே நடித்துள்ளார் ஆனால் இவர் நடித்த அந்த சில படங்கள் எல்லாமே ஹிட் தான். என்னதான் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்பு வந்தாலும் மக்கள் இவரை ஏற்றுக்கொண்டாலும் ஹிந்தியில் வாய்ப்பு வரவே பாலிவுட் சென்றார்.
நடிகையாக மட்டுமில்லாது பாடகியாக முதல்வன் படத்தில் ஷகாலக்க பேபி, ரிதம் படத்தில் ஐயோ பத்திக்கிச்சு, சிட்டிசன் படத்தில் பூக்காரா போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.2007ம் ஆண்டிற்கு பிறகு எந்த மொழியிலும் நடிக்காமல் சினிமாவில் இருந்து காணாமல் போன வசுந்தராவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு நடிகை 18 இல் இருந்தது போலவே 40 வயதிலும் இருக்க முடியுமா? ஏன் நடிகைகளுக்கு வயதே ஆகாதா? நடிகைகள் என்றால் மட்டும் அப்படியே இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பதும் ஒருவேளை இளமையில் இருந்தது போல இப்போதும் இல்லை என்றால் அவர்களை உருவகேலி செய்வதையும் சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது.