1 மணி நேரத்தில் குழந்தைகள் உட்பட 27 பேரை கடித்த நாய்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் ஒரு தெருநாய் 1 மணி நேரத்தில் குழந்தைகள் உட்பட 27 பேரை கடித்துள்ளது. அப்பகுதியில் இருந்த சிசிடி கேமராக்களில் இது தொடர்பான காட்சிகள் பதிவாகி உள்ளன.

கோரக்பூரின் ஷாபூரின் அவாஸ் விகாஸ் காலனியில் ஆஷிஷ் யாதவ்14-ம் தேதி இரவு 9.45 மணிக்கு தனது வீட்டுக்கு முன்பு நடந்தபடியே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஓடி வந்த ஒரு தெரு நாய் தாக்குகிறது. அப்போது அவர் விரட்ட முயன்றபோதும், அந்த நாய் குறைத்தபடி கடித்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை சரமாரியாக கடித்துக் குதறியது. இதனால் அவருடைய கால், வாய் மற்றும் கண்ணில் இருந்து ரத்தம் வழிந்தது சிசி டிவிகேமராவில் பதிவாகி உள்ளது.

இதையடுத்து, அந்த நாய் தனது வீட்டுக்கு முன்பு நின்றிருந்த ஒரு பெண்ணின் காலில் கடித்தது. இதனால் படுகாயமடைந்த அவரது காலில் தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு அடுத்தபடியாக தங்கள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளையும் அந்த நாய் தாக்கியது.

தெரு நாய் தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் செய்தபோதும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Related Posts