வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள்  நீரில் மூழ்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. (P)


Related Posts