தமிழ் மக்களின் நீதி மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் உத்திகளில் தமது பங்கை CTC தீவிரமாக மூடிமறைத்து, தமிழ் மக்களைத் தவறாக வழிநடாத்தியுள்ளது. மிக முக்கியமாக, Brampton நகரில் இனப்படுகொலை நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதை எதிர்க்க CTC பயன்படுத்தப்படுகிறது.
தமிழர் வரலாற்றை அழிக்கவும், போரில் இறந்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கவும், இலங்கையுடன் இணைந்த CTCயின் பணிகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. CTC இன் நடவடிக்கைகள், கனடாவில் இலங்கையின் வெளிநாட்டுத் தலையீட்டுக்குத் துணைபோவதோடு, கனடாவில் உள்ள தமிழர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மலினப்படுத்துகிறது.
இலங்கையுடனான CTC யின் கூட்டுறவானது, தமிழ் இனப்படுகொலையை மூடிமறைத்து, அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த தவறான புரிதலை உருவாக்கி, தமிழர்களின் உண்மையான வரலாறு மற்றும் தொடரும் போராட்டங்களைப் புறக்கணிக்கும் அரசின் திறனை வலுப்படுத்துகிறது.
தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியின் நிர்மாணத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில், கனடாவில் மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் CTC இன் முன் முயற்சிகளை ஒரு கவசமாகப் பயன்படுத்தியுள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டுத் தலையீட்டைச் செயற்படுத்துவதையும், கனடா மற்றும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் CTC நிறுத்த வேண்டும். கனடாவில் இலங்கை அரசின் தலையீட்டை CTC உடனடியாகக் கண்டிக்கவேண்டும். அதேவேளை, இனப்படுகொலை நினைவுச் சின்னம் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் அது தெளிவுபடுத்தவேண்டும்.
தமிழ் கனடியர்கள் மத்தியில் CTC தேவையற்ற ஒரு அமைப்பாக மாற்றமடைந்து விட்டது. இந்தப் பின்னணியில் Tamil Fest உட்பட CTCயின் அனைத்து நடவடிக்கைகளையும் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை கனேடிய தமிழர்கள் மத்தியில் ஒருமித்த கருத்தாக எதிரொலிக்கிறது.
நாமல் ராஜபக்ஷவிற்கு துணிச்சலை கொடுத்தது தமிழரசுக் கட்சியினர் | Thedipaar News