Font size:
Print
இணைய வழி ஊடாக புகையிரத பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்வதற்கான www.pravesha.lk என்ற புதிய இணையத்தளமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வரிசையில் காத்திருக்காமல் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக டிஜிட்டல் தொடருந்து பயணச்சீட்டுக்களை இணையவழி ஊடாக கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரயில் பயணிக்கும் இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிக்கத் தேவையான 2 மற்றும் 3ம் வகுப்பு பயணச்சீட்டுகளை வங்கிகள் வழங்கும் டெபிட் அல்லது கிரெடிட் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
பணம் செலுத்திய பிறகு, டிக்கெட்டின் QR குறியீடு பணம் செலுத்துபவரின் கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தில் QR குறியீட்டை சரிபார்த்து, பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பயண நாளில் மாத்திரம் ரயிலில் பயணம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள பயணத் திகதிக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே இந்த இணையத் தளத்தின் மூலம் டிஜிட்டல் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)
சுவிஸ் வீதி ஓரத்தில் முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி | Thedipaar News
Related Posts