பிக்பாஸில் கலந்துகொள்ள உள்ள பிரபலங்கள்! கன்ஃபார்ம் ஆன பட்டியல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்க போகிறது என்றாலே மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதை மக்கள் குறைத்து கொள்வார்கள். இதுவரை சின்னத்திரை வரலாற்றில் பிக்பாஸ் போன்று எந்த நிகழ்ச்சியும் இல்லை என்பது போல்தான் அந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு உள்ளது. அந்த அளவிற்கு டிஆர்பி ரேட்டிங் உள்ளது. கடந்த 7 வருடங்களாக ஷோவை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் விலகிவிட்ட நிலையில் அடுத்து புது தொகுப்பாளராக யாரை கொண்டு வர இருக்கிறது விஜய் டிவி என மற்றொரு எதிர்பார்ப்பும் இருக்கிறது. 

சிம்பு என்கிறது ஒரு தரப்பு மற்றொரு பக்கம் சத்யராஜ், சரத்குமார் என்றவாறும் ஒரு பேச்சு அடிபடுகிறது. நிகழ்ச்சி வெளியானால் மட்டும் தான் தொகுப்பாளர் யார் என்று தெரியும். இதை அடுத்து இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டு இருக்கிறது. பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண் மற்றும் வில்லியாக நடித்த பாத்திமா இந்த சீசனில் கலந்துகொள்ள உள்ளார்.இவரை அடுத்து விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ தீபக் அடுத்து தொடங்க இருக்கும் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வர இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. பல சேனல்களில் பல ஹிட் சீரியல்களில் நடித்து இருக்கும் தீபக்கிற்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய முறையில் நெல் அறுவடை | Thedipaar News

Related Posts