வறிய குடும்பம் ஒன்றுக்கு 20,000 ரூபாய் தருவேன்! சஜித்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் வெற்றிப் பேரணி கூட்டத் தொடரின் 22 ஆவது கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று(27) இரவு அட்டாளச்சேனையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

வறுமையை ஒழிக்கும் செயற்பாட்டிற்காக அடியெடுத்து வைத்து, சமூர்த்தி, ஜனசவிய, கெமிதிரிய மற்றும் அஸ்வெசும போன்றவற்றில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கிய புதிய முறை ஒன்றை கையாண்டு, 24 மாதங்களுக்குள் மாதம் ஒன்றுக்கு தலா 20000 ரூபா வீதம் வறுமையான குடும்பங்களுக்கு வழங்கி, இரண்டு வருடங்களுக்குள் வறுமையை போக்கும் செயற்த்திட்டங்களை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளுக்கு சிறந்த தரத்திலான 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றை 5000 ரூபாவிற்கு வழங்குவதோடு சாதாரண விலையில் இரசாயன பொருட்களை, திரவ இடு பொருட்களை வழங்குவதோடு, கருப்புச்சந்தையாளர்களுக்கு இடமளிக்காது நெல்லுக்கான நிர்ணய விலையையும் பெற்றுத் தருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளையும், நுகர்வோர்களையும் பாதுகாக்கின்ற வகையில் அரிசி மாபியாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, விவசாயிகளின் விவசாய கடன்களை இரத்து செய்வோம். நட்புவட்டார நண்பர்களின் கடன்களை அரசாங்கத்திற்கு இரத்துச் செய்ய முடியும் என்றால், விவசாயிகளின் விவசாய கடன்களையும் இரத்து செய்ய அரசாங்கத்தினால் முடியும் என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், அந்த செல்வந்தர்களின் இரத்து செய்யப்பட்ட கடன்களை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். (P)

இசையில் அதிக கவனம் செலுத்தியதால் தான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன் | Thedipaar News

Related Posts