நாட்டில் பொது ஒழுங்கைப் பேண ஆயுத படைகளுக்கு அழைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப் படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக மாவட்டங்களில் பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்கும்  அத்தகைய மாவட்டங்களுக்கு அருகிலுள்ள பிராந்திய நீரைப் பராமரிப்பதற்கும் பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு இராணுவம்,  கடற்படை மற்றும் விமானப் படைகளை அனுப்புவதற்கு வர்த்தமானி வழிவகுக்கின்றது. (P)

அதிபரை இடமாற்றம் செய்ய  கோரி ஆர்ப்பாட்டம் | Thedipaar News

Related Posts