தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

காசாவில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 77 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது வரை காசா மீதான இஸ்ரேலின் போரில் 40,602 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 93,855 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்தும் எதிர்வினைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் கண்டித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் இனப்படுகொலைகள் தண்டிக்கப்படாமல் இருக்கக் கூடாது என பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் பெட்ரா டி சுட்டர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல் | Thedipaar News

Related Posts