73,000 துப்பாக்கிகள் வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவிடமிருந்து 73,000 துப்பாக்கிகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவிலிருந்து 73,000 எஸ்ஐஜி-716 ரோந்து ரக துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. அதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ளது. 

இது,7.62X51 எம்எம் காலிபர் துப்பாக்கிகள். இதனைக் கொண்டு 500 மீட்டர் வரை துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பட்டாலியன்களுக்கு இந்த துப்பாக்கிகள் வழங்கப்படும்.

ரஷ்யாவின் ஏகே-203 கலாஷ்னிகோவ் ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, ஏற்கெனவே ரூ.647 கோடிமதிப்புக்கு ஒப்பந்தம் போடப்பட்டு 72,400 எஸ்ஐஜி 716 ரகதுப்பாக்கிகள் பாதுகாப்பு படைக்குவாங்கப்பட்டன.

 இந்த நிலையில் இரண்டாவது முறையாக துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதலில் கொள்முதல் செய்யப்பட்ட 72,400 துப்பாக்கிகளில் ராணுவத்துக்கு 66,400, விமானப் படைக்கு 4,000 மற்றும் கடற்படைக்கு 2,000 என பிரித்தளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது | Thedipaar News

Related Posts