உத்தர பிரதேசம் பஹ்ரைச் வனப்பகுதி வாழ் மக்கள் கடந்த 2 மாதங்களாக ஓநாய்களைக் கண்டுநடுநடுங்கிக் கொண்டிருக்கின்றனர். காரணம், இந்த காட்டுக்குள் உலாவும் ஓநாய்கள் 45 நாட்களில் 6 குழந்தைகள் உள்பட 8 பேரை கடித்துக் குதறிக் கொன்றுவிட்டன. 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையிடம் உள்ளூர் மக்கள் புகார் அளித்தனர்.
25 வனத்துறை குழுக்கள், 72 மணி நேர தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஓநாய்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்ட 3 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த புதன் காலை 9:30 மணி அளவில் பஹ்ரைச் வனப்பகுதிக்கு உட்பட்டசிசியா கிராமத்தில் உள்ள கரும்புத்தோட்டத்தில் பதுங்கியிருந்த ஓநாய் ஒன்றை மயக்க மருந்து ஊசி செலுத்தி வலை வீசிப் பிடித்தனர். இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் 4 ஓநாய்களை வனத்துறையினர்பொறிவைத்து பிடித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் ஊரை அச்சுறுத்தி வந்த ஓநாய்களில் 4ஐ பிடித்துவிட்டோம். மீதமுள்ள இரண்டு ஓநாய்களையும் தேடிப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என வன அலுவலர் ஆகாஷ்தீப் பதாவன் கூறினார்
எரிபொருள் விலையை குறைப்பதே என் முதல் பணி | Thedipaar News